முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும் பரபரப்பு பின்னணி!

 

முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும்  பரபரப்பு பின்னணி!

‘இந்த ஸ்டாலின் சொல்கிறார்; எடப்பாடி பழனிச்சாமி செய்கிறார்’ என்று ரஜினி பாணியில் பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். தான் ஆட்சிக்கு வந்ததும் அறிவிக்கப்போவதாக சொல்லும் ஒவ்வொன்றையும் முதல்வர் அறிவிக்கிறார் என்பதைத்தான் அப்படி சொல்லி வருகிறார் ஸ்டாலின். ஆனால், உண்மை நிலவரம் என்ன?

முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும்  பரபரப்பு பின்னணி!

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்த மறு தினமே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் ஸ்டாலின் சொல்வதுதான் உண்மை என்றும், மக்களிடையே பேச்சு எழுந்தது.

ஸ்டாலினும் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார்.

‘’வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். உடனே, பொங்கலை முன்னிட்டு 2500 ரூபாய் கொடுக்கிறார் முதல்வர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று நான்சொன்னேன்.. உடனே அவர் 10ம் வகுப்பு தேர்வினை ரத்து செய்து அறிவிக்கிறார். இ-பாஸ் முறையிலும் அப்படித்தான். நான் சொன்ன பின்னர்தான் ரத்து செய்தார். அரசு பள்ளி மாணவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பாக போராட்டமும் நடத்தினேன். அடுத்து உடனே அவர் இட ஒதுக்கீட்டினை அறிவிக்கிறார். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். அவர் உடனே அதை அறிவித்துவிட்டார். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்றேன். உடனே அவர் தடை செய்கிறார்.

முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும்  பரபரப்பு பின்னணி!

ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் குறைகளை தீர்ப்பேன் என்று சொன்னதும், பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண உதவி அழைப்பு மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் துவக்கம் என்று அறிவித்து, பொதுமக்கள் “அரசின் கட்டணமில்லா சேவை 1100” என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று அறிவிக்கிறார். இதனால்தான் சொல்கிறேன்..இந்த ஸ்டாலின் சொல்கிறார்; எடப்பாடி பழனிச்சாமி செய்கிறார்’’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், ‘’திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டப்படும்’’ என்று இன்றைய தினம் பொள்ளாட்சியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தில் பேசியபோது தெரிவித்தார் ஸ்டாலின்.

முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும்  பரபரப்பு பின்னணி!

அத்தோடு விடாமல், ‘’திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நிறைவேற்றி விடுவார்’’ என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

முதல்வரின் அடுத்த அறிவிப்பு, ‘மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடிதானே’ என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால், கோட்டை வட்டாரத்தில் நாம் விசாரித்தால் விசயமே வேறாக இருக்கிறது. ’’முதல்வர் ரொம்ப டென்ஷனில் இருக்கிறார்’’ என்று ஆரம்பித்தார்கள். ‘’விழுப்புரம் மாநாட்டில் மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார் முதல்வர். இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட ஸ்டாலின், இன்று அறிவித்துவிட்டார். இனிஅறிவித்தால், வழக்கம் போலவே நான் சொல்லித்தான் முதல்வர் அறிவித்தார் என்று விமர்சனம் செய்வார். அதற்காக நல்ல திட்டத்தினை அறிவிக்காமல் இருக்க முடியுமா என்ன? அதனால்தான் டென்ஷனில் இருக்கிறார்.’’என்கிறார்கள்.

முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும்  பரபரப்பு பின்னணி!

‘’மகளிர் சுய உதவி குழு கடன் விவகாரம் மட்டுமல்ல; விவசாய கடன்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களிலும் இதுதான் நடந்திருக்கிறது. எப்படியோ மோப்பம் பிடித்தூவிட்டு முன்கூட்டியே அறிவித்து, ஒரு பொய்யான பிம்பத்தினை கட்டமைத்து வருகிறார் ஸ்டாலின்’’ என்றவர்களிடம், ‘’போடும் திட்டங்களை ரகசியம் காக்க முடியாதா’’ என்றதற்கு, ‘’ஒரு திட்டத்தினை அறிவிப்பதற்கு முன்பாக, அதுகுறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கலந்தாலோசிப்பது வழக்கம். இந்த ஆலோசனையில்தான் சிலரால் இது லீக் ஆகிவிடுகிறது. இதை மோப்பம் பிடிப்பதற்காகவே தீவிரம் காட்டிவருகிறார் ஸ்டாலின்’’என்று சொல்லும் அவர்கள், ‘’இதெல்லாம் ஒரு பிழைப்பா?’’என்று எரிச்சலடைகிறார்கள்.