எந்நேரமும் முகநூலில் இருந்து ஏகப்பட்ட பெண்களை வளைத்த சமையல்கலைஞர்!

 

எந்நேரமும் முகநூலில் இருந்து ஏகப்பட்ட பெண்களை வளைத்த சமையல்கலைஞர்!

சென்னை அடுத்த கூவத்தூர் காரன்குப்பத்தை சேர்ந்த கார்த்தி, 12ம் வகுப்பு படித்துவிட்டு சமையல் வேலை செய்து சம்பாதித்து வந்தார். எந்நேரமும் முகநூலில் இருந்து வந்த இவருக்கு புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவியின் நட்பு கிடைத்திருக்கிறது. அந்தப்பெண்ணுடன் தினமும் சாட்டிங்கில் பேசும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்.

எந்நேரமும் முகநூலில் இருந்து ஏகப்பட்ட பெண்களை வளைத்த சமையல்கலைஞர்!

நாள் ஆக நாளாக அந்த மாணவி கார்த்திக்கின் காதல் வலையில் விழுந்து விட்டார். தினமும் அந்த மாணவியிடம் காதல் ரசம் சொட்டச்சொட்ட பேசி வந்த கார்த்திக், மெல்ல மெல்ல செக்சியாகவும் பேசி மாணவியை மயக்கி இருக்கிறார். அந்த மயக்கத்தில் இருந்த மாணவியிடம் , குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்ப சொல்லி இருக்கிறார் கார்த்திக். அந்த மாணவியும் அப்படியே செய்ய, இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று குஷியாகிவிட்டார் கார்த்திக்.

வீடியோ தன் கைக்கு வந்ததும், தான் படித்துக்கொண்டிருப்பதாகவும், அதற்கு 5 ஆயிரம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மாணவியும் 5 ஆயிரம் ஏற்பாடு செய்து காதலனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் 10 ஆயிரம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ‘’அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?’’ என்று மாணவி சொல்லவும், அப்போதுதான் தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார் கார்த்திக்.

எந்நேரமும் முகநூலில் இருந்து ஏகப்பட்ட பெண்களை வளைத்த சமையல்கலைஞர்!

10 ஆயிரம் பணத்தை தரலேன்னா உன்னோட வீடியோவை நெட்ல போட்டுடுவேன்னு மிரட்டியிருக்கிறார். தலைக்கு மேல் போச்சு என்று உணர்ந்த மாணவி தந்தையிடம் சொல்லி அழுதிருக்கிறார். மாணவியின் தந்தை கார்த்திக்கிடம் எச்சரித்தபோது, 50 ஆயிரம் கொடுக்கலேன்னா உன்மகள் வீடீயோவை நெட்ல போட்டுடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கிறார்.

வேறு வழியின்றி புதுச்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார் தந்தை. செல்போன் எண்ணை வைத்தும், பேஸ்புக்கினை வைத்தும் கூவத்தூரில் இருந்த கார்த்திகை தூக்கி வந்து வசமாக கொடுத்து விசாரித்ததில் இது மாதிரி செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவருகிறது. புதுச்சேரி மாணவி மாதிரியே 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. ஆனால் அப்பெண்கள் யாரும் புகார் கொடுக்காததால், புதுச்சேரி மாணவி புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.