உங்களுக்கு எதற்கு ஒரு தனிகட்சி.. திமுகவோடு இணைத்துவிடலாமே ராகுல்? பாஜக

 

உங்களுக்கு எதற்கு ஒரு தனிகட்சி.. திமுகவோடு  இணைத்துவிடலாமே ராகுல்? பாஜக

முதல்வர் பழனிச்சாமி அறிவிக்கும் எந்த திட்டமும் தன் சொந்த புத்தியில் தோன்றியதல்ல என சொல்லும் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் சொல்லும் திட்டங்களும் பேசும் பேச்சுக்களும் எல்லாமே பிரசாந்த் கிஷோர் நாடக கம்பெனி போட்டு தரும் திட்டங்கள் தான். துண்டு சீட்டை கூட பார்த்து ஒழுங்காக பேச தெரியாமல் திக்கிதிணறி உளரும் நீங்களும் தினம் தினம் பொய்யே பேசி திரியும் உங்கள் மகனும் மக்கள் மத்தியில் உங்கள் சொந்த புத்தியில் எப்போது உண்மையை பேசப்போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் காயத்ரிரகுராம்..

உங்களுக்கு எதற்கு ஒரு தனிகட்சி.. திமுகவோடு  இணைத்துவிடலாமே ராகுல்? பாஜக

ஸ்டாலின், உதயநிதியை அடுத்து நேற்று புதுச்சேரி வந்துசென்று ராகுல்காந்திக்கும் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

உங்களுக்கு எதற்கு ஒரு தனிகட்சி.. திமுகவோடு  இணைத்துவிடலாமே ராகுல்? பாஜக

உங்கள் பாட்டி இந்திராகாந்தியை பெருந்தலைவர் காமராசர்தான் பிரதமராக்கினார். இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் அடையாளமாக இருந்த காமராசர் பெயரை எந்த காங்கிரஸ் கட்சியினரும் உச்சரிப்பதுகூட இல்லை என்கிறார். புதுவையில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி, காலை சிற்றுண்டி திட்டத்துக்கு தமிழகத்தை ஊழலால் சீரழித்த கருணாநிதி பெயரை வைக்கிறார். உங்களுக்கு எதற்கு ஒரு தனிகட்சி திமுகவோடு உங்கள் கட்சியை இணைத்துவிடலாமே ராகுல் என்று கமெண்ட் அடித்திருக்கிறார் காயத்ரிரகுராம்.