பால்தாக்ரேவின் தமிழர் விரோத போக்கை கைவிட செய்த மாவீரன்.. காயத்ரி ரகுராம் பெருமிதம்

 

பால்தாக்ரேவின் தமிழர் விரோத போக்கை கைவிட செய்த மாவீரன்..  காயத்ரி ரகுராம் பெருமிதம்

இந்து எழுச்சிக்கு காரணமானவர்களின் குறிப்பிடத்தக்கவர் தாணுலிங்க நாடார். கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் 17-2-1915 அன்று பிறந்தார் தாணுலிங்க நாடார். சிறுவயதிலேயே இந்து உணர்வு மிக்கவராக இருந்ததால் 1938ல் கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943ல் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பால்தாக்ரேவின் தமிழர் விரோத போக்கை கைவிட செய்த மாவீரன்..  காயத்ரி ரகுராம் பெருமிதம்

சட்டப்படிப்பை முடித்த தாணுலிங்க நாடார், 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார். 1946ல் திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார். 1948ல் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1951ல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.

1982ல் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார். 1982 ல் இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் இராமகோபாலனால் நியமிக்கப்பட்டார்.

பால்தாக்ரேவின் தமிழர் விரோத போக்கை கைவிட செய்த மாவீரன்..  காயத்ரி ரகுராம் பெருமிதம்

3-10-1988ல் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில், ’’சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள்…’’ என்று சொல்லியபடியே , மேடையில் சரிந்து மரணம் அடைந்தார்.

தனது வாழ்வின் இறுதி நிமிடம் வரைக்கும் இந்து எழுச்சிக்கு குரல் கொடுத்த தாணுலிங்க நாடாரின் பிறந்த தினம் இன்று.

இதுகுறித்து, தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’கேரளாவில் எதிர்கட்சி தலைவராகவும் தமிழக எம்.பி யாகவும் பணியாற்றி மும்பை தமிழர்களும் இந்துக்கள் தான் என சொல்லி பால்தாக்ரேவின் தமிழர் விரோத போக்கை கைவிட செய்த மாவீரன் , மண்டைகாட்டில் இந்துக்கள் பாதிக்கப்பட்ட போது இரண்டு இலட்சம் பேரை திரட்டி இந்துக்களுக்கு நீதி பெற்று தந்து , இந்துக்களின் தன்மானம் காத்த இந்துக்களின் காவலன் இந்து முண்ணனியின் தலைவர் அய்யா தாணுலிங்க நாடார் அவர்களின் 107வது பிறந்த நாளில் அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம்’’ என்று கூறியிருக்கிறார்.