ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே… கமல்ஹாசன்

 

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே… கமல்ஹாசன்

பிப்ரவரி14 இன்று காதலர் தினம். உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்கள் காதலர் தின வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே… கமல்ஹாசன்

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்,
‘’காதலர் தினம்!
காதல் என்பது உச்சபட்ச மகிழ்வின் திறவுகோல்!
திறந்து, சிறந்து விளங்குவோம்!’’என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘’காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

’’அதனால் தான் உன்னை காதலிக்கிறோம் தலைவரே’’என்று கமலின் டுவிட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம், ’’காதலால் பல குடும்பத்தில் பெற்றோர்கள் இறக்க நேரிடும். மோசமானது காதல். படத்திற்கு வேண்டுமானால் காதல் நல்லாருக்கும்..
நடைமுறைக்கு சாத்தியமாகது. படத்தை பார்த்து பல பெண்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகிவிட்டது’’என்றும்,

’’எதுக்குப் பெண்ணைப் பெற்றவன் தெருவும் திண்ணையுமா போறதுக்கோ. காதல் என்பது கல்யாணத்துக்கு அப்புறம் வர வேண்டும்.கல்யாணத்துக்கு முன் வந்தால் அதுக்குப் பேரு காதல் அல்ல இனக் கவர்ச்சி. ஆமா காதல் கல்யாணம் செய்த உமது நிலையப் பார்த்த பிறகும் இந்த வசனம் தேவையா’’ என்றும் எதிர்ப்பினை பதிவிட்டு வருகின்றனர்.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே… கமல்ஹாசன்

’’வேலண்டைன் நாளை வியாபாரமாக்கியது ஒரு கூட்டம், அதை விபச்சாரம் ஆக்கியது இங்கே ஒரு கூட்டம். காதலர் தினமாக மாற்றி அப்பாவி பெண்களை ஏமாற்றியது மற்றொரு கூட்டம். அன்பு, நட்பு, உறவு இவற்றின் உண்மையை மறைத்து உலகை ஏமாற்றும் கயவர் கூட்டத்திடம் இருந்து நமது பிள்ளைகளை காப்பாற்றுங்கள்’’என்று ஒட்டுமொத்தமாக காதல் தினத்திற்கு வலுவான எதிர்ப்பினையும் பதிவு செய்கின்றனர்.