‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள்; இவர்களா இந்து மக்களின் காவலர்கள்? திருமுருகன் காந்தி

‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள்; இவர்களா இந்து மக்களின் காவலர்கள்? திருமுருகன் காந்தி

விவசாயிகள் போராட்டம் குறித்து ‘கிஷான் மகா பஞ்சாயத்து’ எனும் ஆலோசனைக்கூட்டம் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. ஷாமிலியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். மத்தியர் அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தினை முன்னெடுத்து செல்வோம் என்று உறுதி கூறினர்.

‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள்; இவர்களா இந்து மக்களின் காவலர்கள்? திருமுருகன் காந்தி

நேற்றும் உத்திரப்பிரதேசத்தில் மொராதாபாத் மாவட்டம் பிலாரி சட்டமன்ற தொகுதியில் நடந்த கிஷான் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயிகள் திரண்டனர். விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு என்றும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனால் விவசாயிகள் போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கும் என்று தெரிகிறது.

‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள்; இவர்களா இந்து மக்களின் காவலர்கள்? திருமுருகன் காந்தி

இதுகுறித்து மே-17 இயக்கம் திருமுருகன்காந்தி, ‘’பாஜகவின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டெழும் மக்கள். அயோத்தியில் இராமனுக்கு கோவில் கட்டினால் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களென நினைத்த பாஜகவிடம் ‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள் வடமாநில இந்துக்கள். இவர்களா இந்து மக்களின் காவலர்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள்; இவர்களா இந்து மக்களின் காவலர்கள்? திருமுருகன் காந்தி