குறள் சொல்லும் மாணவர்களுக்கு பெட்ரோல் பரிசு – சீமான் வாழ்த்து

 

குறள் சொல்லும் மாணவர்களுக்கு பெட்ரோல் பரிசு – சீமான் வாழ்த்து

கரூர் அருகே நாகம்பள்ளி கிராமத்திலமைந்துள்ள வள்ளுவர் எரிதிரவக்கிடங்கில், 20 குறள்களைக் கூறினால் மாணவர்களுக்கு எரிதிரவம் பரிசாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் செங்குட்டுவன் அறிவித்திருக்கிற செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.

குறள் சொல்லும் மாணவர்களுக்கு பெட்ரோல் பரிசு – சீமான் வாழ்த்து

வணிகத்தில் இலாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாது தமிழுக்குத் தொண்டாற்றுவதையும், உலகப்பொதுமறை திருக்குறளின் மேன்மையை நாளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாக கொண்டு பெரும்பணியாற்றி வரும் செங்குட்டுவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன், தமிழ் மீது அளவுக் கடந்த பற்று கொண்டவர். இளைய தலைமுறை மத்தியில் திருக்குறள் கற்றலை ஊக்குவிக்கும் விதமாக, 10 திருக்குறள் ஒப்புவித்தால் 1/2 லிட்டர் பெட்ரோல், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

குறள் சொல்லும் மாணவர்களுக்கு பெட்ரோல் பரிசு – சீமான் வாழ்த்து

இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த அசத்தல் அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளும் அப்பகுதி மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்து இலவசமாக பெட்ரோல் வாங்கிச் செல்கிறார்களாம்.

இது குறித்து செங்குட்டுவன், மாணவர்கள் மத்தியில் தமிழ் வாசிப்பு குறைந்து வருவகிறது. அதற்காகவே இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஏப்.31ம் ஆம் தேதி வரை திருக்குறள் சொன்னால் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும். மாணவர்கள் அதனை ஒப்புவிக்கும் போது இலவசமாக பெட்ரோல் வழங்கி நான் மகிழ்வதோடு அவர்களையும் மகிழ்விக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செங்குட்டுவனுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்.