’’ஓ.. இதுதான் அடங்க மறு அத்துமீறு என்பதோ? ’’ -எச்.ராஜாவுக்கு வலுக்கும் கண்டனம்

 

’’ஓ.. இதுதான் அடங்க மறு அத்துமீறு  என்பதோ? ’’ -எச்.ராஜாவுக்கு வலுக்கும் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பாடல்தான் ‘அடங்க மறு.. அத்து மீறு..’’என்பது. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., டெல்லி – ஹரியானா எல்லை திகிரி பார்டரில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர்,மெட்ரோ ரயில் பயணத்தில் பெண்கள் இருக்கை என்று எழுதியிருக்கும் அமர்ந்திருக்கும் போட்டோ வெளியாகியிருக்கிறது.

’’ஓ.. இதுதான் அடங்க மறு அத்துமீறு  என்பதோ? ’’ -எச்.ராஜாவுக்கு வலுக்கும் கண்டனம்

இந்த போட்டோ பாஜக முன்னாள் தேசிய செயலாலர் எச்.ராஜா கண்ணில் பட, ‘’ஓ இதுதான் அடங்க மறு அத்துமீறு என்பதோ?’’என்று கேட்கிறார்.

’’இதுதான் உண்மையான அடங்க மறு…’’ என்று கே.மணி உள்ளிட்ட நெட்டிசன்கள் பலரும் எச்.ராஜாவின் இந்த கேள்விக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கண்டனமும் வலுக்கிறது.

’’முன்னேற்றம் சார்ந்த விஷயத்தை தவிர அனைத்தையும் பேசும் எச் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று பி.குமரேசன் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

’’இதுக்குதான் படிங்கடான்னு சொல்றது.. இந்திதான் தெரியாது.. ஆங்கிலமும் தெரியாதா.. இவனுக்கும் கூவ சிலர்.. காலக்கொடுமைடா’’என்கிறார் சாப்ளின் செல்லப்பா.

’’எச்.ராஜா என்றாலே எப்பவும் கீழ்த்தரமாக மட்டுமே சிந்திப்பார்’’என்கிறார் லயோலா மணி.

இந்த விவகாரத்தில், ‘’அது புத்தி அவ்வளவுதான், எந்த உயரத்துக்கு போனாலும்..’’என்று எல்.பி. கணேஷ் கமெண்ட் போட, ‘’சாதியை குறிப்பிடுகிறீர்கள்..தவறு’’என்று கண்டனம் கொடுத்திருக்கிறார் ஜெயகுமார். பதிலுக்கு எச்.ராஜா மீதும் சாதிய கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

‘’உங்களை எல்லாம் அரசியல்வாதியாக அமர செய்த எங்களை செருப்பால் அடிக்கணும். இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா எச்.ராஜா அவர்களே..’’என்று எரிச்சலடைகிறார் குமரேசன்.

’’ஓ.. இதுதான் அடங்க மறு அத்துமீறு  என்பதோ? ’’ -எச்.ராஜாவுக்கு வலுக்கும் கண்டனம்

’’பெண்கள் யாரும் இல்லை என்றால் அவர்களுக்கு ஒதுக்க கப்பட்ட இடத்தில் அமர்வது தவறு அல்ல. அப்படி பெண்கள் வந்து விட்டால் நிச்சயம் திருமா அவர்கள் எழுந்து இடம் கொடுப்பார். இப்படி கீழ்த் தரமாக விமரசினம் செய்வது பெரிய மனிதர்களுக்கு அழகல்ல’’ என்கிறார் சுகுமார் வாசுதேவன்

’’அட முட்டாள்களா, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை பெண்ணுக்கு கொடுக்காமல், பெண்களை நிற்கவைத்துவிட்டு இவர் அமர்ந்திருந்தால் தான் தவறு… காலியா இருக்கும் இருக்கையை பயன்படுத்துவது தவறா?’’என்று கேட்கிறார் செந்தமிழ் செல்வன்.