Home அரசியல் கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்

கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்

பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதி-ஸ்டாலின் – உதயநிதி பற்றி அவர் பேசிய பேச்சுதான் இன்றைக்கு இணையங்களில் பரபரப்பாக இருக்கிறது.

கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்
கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்

’’கருணாநிதி எவ்வளவு கேவலமான ஆள் என்பதைப் பற்றி சொல்கிறேன். மணிவண்ணன் எடுத்த படத்தில், மார்வாடி பெண்களை வைத்து பாடல் எடுக்க வேண்டும் என்று கருணாநிதி எழுதிக்கொடுத்திருக்கிறார். அதுமாதிரியே மணிவண்ணும் பாடலை எடுத்துக்காட்ட, கருணாநிதி சிரிக்கிறார்.

கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்

என் படங்களில் பாடல்கள் நல்லாக இருக்கும் என்பதால் என்னையும் கூப்பிட்டிருந்தார் மணிவண்ணன்.
சிரித்த கருணாநிதி, ‘’என்னா மணிவண்ணன் எடுத்திருக்கீங்க?’’என்று கேட்டார். உடனே மணிவண்ணன், ‘’நீங்கதான ஐயா மார்வாடி பெண்களை வச்சு சாங் எடுக்கணும்னு சொல்லி இருந்தீங்க..’’ என்று இழுக்க, ’’மார்வாடி பெண்களை வச்சுத்தான் சாங் எடுக்கச்சொன்னேன். நீ மார் வாடிய பெண்களை வச்சு எடுத்து வச்சிருக்கியே’’ என்று சொன்னார் கருணாநிதி’’என்றவர்,

’’நான் போகுற ஒவ்வொரு கூட்டத்துலயும் ஒரு டிடி ஆரை தேடிக்கிட்டு இருக்குறேன். திருட்டு ரயிலில்தான் சென்னை வந்தேன் என்று கருணாநிதி சுயசரிதையில் சொல்லி இருக்கிறார். அந்த ரயிலில் வந்த டிடிஆர் மட்டும் விழிப்போடு இருந்து கருணாநிதியை ரயிலை விட்டு இறக்கி விட்டிருந்தால் இன்றைக்கு தமிழ்நாடு தப்பியிருக்கும். அதைச்செய்யததால் அந்த டிடிஆரை தேடிக்கிட்டு இருக்குறேன். கையில் கிடைச்சா செத்தான்’’என்றார் அதிரடியாக.

கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்

’’எங்க அப்பாவை முதல்வர் ஆக்குவேன்னு உதயநிதி சொல்லிக்கிட்டு இருக்கான். அதை அவரோட அப்பாவினாலேயே செய்ய முடியல. முதல்ல உருப்படியா கதை கேட்டு நடிக்கணும். இன்னும் நடிக்கவே தெரியல’’என்று உதயநிதி ஸ்டாலினை சாடினார்.

கருணாநிதி அடித்த ‘மார்வாடி’கமெண்ட்! போட்டு உடைத்த ஆர்.சுந்தர்ராஜன்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? – நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்...

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

தடுப்பூசி போட கிராமத்திற்கு வரும் டாக்டர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் பார்த்து ஓடி ஒளிந்துகொள்வதும், ஊருக்குள் விடாமல் அடித்து உதைத்து அனுப்பிய சம்பவங்களும் முன்பெல்லாம் நடந்துள்ளன. இப்போதும் அந்த சம்பவங்கள் நடக்கின்றன.

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை சின்னாபின்னாமாக்கியது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை எட்டியது. உயிரிழப்பும் நான்காயிரத்தைத் தாண்டிச் சென்றது. அதற்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தைக்...

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது....
- Advertisment -
TopTamilNews