அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு தேதி என்ன?

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு தேதி என்ன?

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன், கடந்த 2014ம் ஆண்டும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு தேதி என்ன?

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2011 -2013 ஆண்டு காலகட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் குறிப்பிட்ட மகேந்திரன், அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், அமைச்சரின் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு தேதி என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று இந்த வழக்கினை முடித்துவைக்க வேண்டும் என்று ராஜேந்திரபாலாஜியின் தரப்பில் வைத்த கோரிக்கைக்கையினை அடுத்து, மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் வழக்கினை விசாரித்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. ஆனாலும், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.