அவர் காட்டிய கறார்… இறங்கி வந்த ராமதாஸ்!

 

அவர் காட்டிய கறார்… இறங்கி வந்த ராமதாஸ்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று ஜி.கே.மணி, கே.பாலு உள்ளிட்ட 6 பாமக நிர்வாகிகள் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன், கே.பி.முனுசாமியும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

அவர் காட்டிய கறார்… இறங்கி வந்த ராமதாஸ்!

தைலாபுரத்தில் நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்தையின் நிறைவில் அதுகுறித்த எந்த தகவலும் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அந்த பேச்சுவார்த்தையில் நடந்ததென்ன என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

1951ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வன்னியர்கள் 10.5 சதவிகிதம் என உள்ளதால் 10.5 சதவிகித உள் ஒதுக்கிடு கொடுத்தால் ராமதாஸ் சமாதானமாகிவிடுவார் என்று ஜி.கே.மணி சொல்ல, 1953ல் தமிழகத்தில் இருந்து ஆந்திரா பிரிந்தது. ஆந்திரா பிரிந்ததால் வன்னியர்களின் மக்கள் தொகை 50 சதவிகிதைம் குறைந்திருக்குமே என்று ஒருவர் சொல்ல, அமைச்சர் தங்கமணியும் அது குறித்து யோசித்திருக்கிறார்.

அவர் காட்டிய கறார்… இறங்கி வந்த ராமதாஸ்!

அப்போது இடையில் சடாரென்று புகுந்த கே.பி.முனுசாமி, அந்த கணக்கு 1951ல் எடுத்தது. அந்த 10.5 இப்போது 5.5 சதவிகிதமாக மாறியிருக்கலாம். நீதிபதி குலசேகரன் கமிட்டியின் அறிக்கை வந்த பிறகு அது தெரிந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்.

உள் ஒதுக்கீடு, வெளி ஒதுக்கீடு பற்றியெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதலில் எத்தனை சீட் வேணும், எவ்வளவு தொகை வேணும்? அதை கேட்டுச்சொல்லுங்க. முதலில் கூட்டணி கதையை முடிப்போம் என்று கறார் காட்டியிருக்கிறார்.

அவர் காட்டிய கறார்… இறங்கி வந்த ராமதாஸ்!

இதையடுத்து இன்று முதல்வரை சந்திக்கிறார் ராமதாஸ் என்று தகவல் வருவதால் இட ஒதுக்கீடு பிரச்சனையை தள்ளிவைத்துவிட்டு கூட்டணியை உறுதி செய்கிறார் ராமதாஸ் என்றே தெரிகிறது.