டுவிட்டருக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

 

டுவிட்டருக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சனையாக இருந்து வெளிநாட்டினரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட பேரணி தொடர்பாக டுவிட்டர் பக்கங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பதிவுகள் வருவதால் அது நாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு சமூக வலைத்தளமான டுவிட்டர் தளத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

டுவிட்டருக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

ட்விட்டர் சமூக வலைதள அமைப்புக்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில், நாட்டின் அமைதிக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, இனப்படுகொலை நடப்பதாக டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் முடங்கிய சில மணி நேரங்களிலேயே திரும்ப பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டுவிட்டருக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

மத்திய அரசின் உத்தரவை மதிக்காவிட்டால் கடும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று டுவிட்டருக்கு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.