எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் மரணம்

 

எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் மரணம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன், மாடியில் இருந்து தவறி விழுந்தது சுயநினைவின்றி மரணம் அடைந்தார்.

எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் மரணம்

மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு இறுதி காலம் வரை மெய்க்காப்பாளராக இருந்தவர் கே. பி. ராமகிருஷ்ணன். எம்ஜிஆர் நடித்த படங்களுக்கு சண்டைக்காட்சிகளில் எம்ஜிஆருடன் நடித்து மிகவும் பிரபலமானவர் ராமகிருஷ்ணன். எம்ஜிஆரின் பல படங்களில் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் டூப் போட்டவர் ராமகிருஷ்ணன். அவரையே தனது மெய்க்காப்பாளராக வைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.

பின்னாளில் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதும் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராக இருந்தார் ராமகிருஷ்ணன். எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சார வேனில் எம்ஜிஆர் உடனேயே இருப்பார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவுக்கும் சில காலம் மெய்க்காப்பாளராக இருந்தார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு எம்ஜிஆருடன் தான் பழகிய நினைவுகளை கட்டுரைகளாகவும் புத்தகங்களாகவும் எழுதி வந்தார் ராமகிருஷ்ணன்.

எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் மரணம்

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்த அவர் கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டு மூளையில் ரத்தக் கட்டி உண்டாகி சுயநினைவை இழந்தார். மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த 1 ஆம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

தொடர் சிகிச்சை அளித்தும் கே. பி. ராமகிருஷ்ணன் சுய நினைவு திரும்பாமலேயே இருந்தார். சுய நினைவு திரும்பாத நிலையிலேயே நேற்று அவர் மரணமடைந்தார். கே.பி. ராமகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் மரணம்

மறைந்த கேபி ராமகிருஷ்ணனின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார் ஹேப்பி ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

திரை உலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.