அதானி எனும் குஜராத்திக்காக நம் மீனவர்கள் பலி கடாக்களாக்கப்பட்டார்களா? திருமுருகன்காந்தி

அதானி எனும் குஜராத்திக்காக நம் மீனவர்கள் பலி கடாக்களாக்கப்பட்டார்களா? திருமுருகன்காந்தி

கொழும்பு துறைமுகத்தை அதானிக்கு தருவதில்லை என இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை மீது அழுத்தம் கொடுத்து அதானிக்கு துறைமுகத்தை பெற்றுத்தர வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் கடந்த மாதம் சென்றார். ஜெயசங்கர் சந்தித்து சென்றவுடன் தமிழ் மீனவரை இலங்கை படுகொலை செய்தது. இச்செயல் என்பது இந்தியாவிற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கவும் செய்திருக்கக்கூடும் என்பது இப்போது புலனாகிறது என்கிறார் மே-17 இயக்கம் திருமுருகன் காந்தி.

அதானி எனும் குஜராத்திக்காக நம் மீனவர்கள் பலி கடாக்களாக்கப்பட்டார்களா? திருமுருகன்காந்தி

மேலும், ‘’அதானிக்கு துறைமுகத்தை தர மறுத்திருப்பதை மோடி அரசு ஏமாற்றத்தை உடனடியாக அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. தமிழ் மீனவர் படுகொலைக்கு எந்த நெருக்கடியும் தராத மோடி அரசு, அதானிக்காக பதறுகிறது’’என்கிறார்.

அதானி எனும் குஜராத்திக்காக நம் மீனவர்கள் பலி கடாக்களாக்கப்பட்டார்களா? திருமுருகன்காந்தி

’’அதானி எனும் குஜராத்திக்காக நம் மீனவர்கள் பலிகடாக்களாக்கப்பட்டார்களா? மீன்பிடி உரிமைக்காக இலங்கைக்கு அமைச்சரை மோடி ஏன் அனுப்பியதில்லை?வெளியுறவுகொள்கையில் எல்லைபுற மாநிலமான தமிழகத்திற்கு உரிமையுண்டு. இதை தமிழக கட்சிகள் நிலைநாட்ட வேண்டுமென மே17 கடந்த 10 ஆண்டுகளாக கோரி வந்திருக்கிறது’’ என்கிறார்.