2100 ஆண்டுகளுக்கு முந்தைய ஐபோன் கேள்விபட்டுருக்கீங்களா?

 

2100 ஆண்டுகளுக்கு முந்தைய ஐபோன் கேள்விபட்டுருக்கீங்களா?

வேதகாலத்தில் இண்டர்நெட் இருந்தது என நமது மத்திய அமைச்சர் சொன்னபோதுகூட நான் நம்பவில்லை. நடாஷா என புனைப்பெயர் இடப்பட்டுள்ள இறந்த பெண்ணின் உடலருகில் கண்டெடுக்கப்பட்டது அச்சு அசலாக ஐபோன் மாடலில் இருக்கும் அந்தகாலத்து ஆபரணமாக இருக்கக்கூடும்.

2100 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண் ஃபேஷன் டிசைனர் ஒருவரையும், அருகில் அச்சுஅசலான ‘ஐபோன்’ மாதிரியான ஆபரணத்தையும் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். என்னாது, 2000 வருஷத்துக்கு முந்தின ஐபோனா? இது ஸ்டீவ் ஜாப்ஸுக்கு தெரியுமா என்றால், எமக்குத் தெரியாது. வேதகாலத்தில் இண்டர்நெட் இருந்தது என நமது மத்திய அமைச்சர் சொன்னபோதுகூட நான் நம்பவில்லை. நடாஷா என புனைப்பெயர் இடப்பட்டுள்ள இறந்த பெண்ணின் உடலருகில் கண்டெடுக்கப்பட்டது அச்சு அசலாக ஐபோன் மாடலில் இருக்கும் அந்தகாலத்து ஆபரணமாக இருக்கக்கூடும்.

2100 year old fashion designer remains

சைபீரியாவில் இப்போது நிலவிவரும் கோடைகாலத்தினால், மிகப்பெரிய அணைக்கட்டு ஒன்று வற்றிவிட்டது. வற்றிய நிலையில் இருந்த அணைக்கட்டை தொல்லியில் துறையினர் நோண்டி நொங்கெடுத்ததில், இந்த முக்கியமான புதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தப் பெண்ணை அந்தக் காலத்து அரசியாகவோ, அல்லது சாமியாராகவோ இருந்திருக்கக்கூடும் என்று நினைத்த ஆராய்ச்சியாளர்கள், அதன்பிறகே இவர் ஃபேஷன் நிபுணராக இருக்ககூடும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பல்வகை ஆபரண கற்கள் பொதிக்கப்பட்ட அந்த ‘ஐபோன்’ எந்தவகை மாடல் என்று மட்டும் கடைசிவரை ஆராய்ச்சியாளர்கள் சொல்லவே இல்லை.