கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு: சூழலியல் ஆர்வலர் கைது!

 

கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு: சூழலியல் ஆர்வலர் கைது!

குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. இதுதொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ள டெல்லி போலீஸ், காலிஸ்தான் ஆதரவாளர்களால் வன்முறை தூண்டப்பட்டதாகவும், இந்தியாவின் இறையாண்மையைக் கெடுக்கும் சர்வதேச சதி எனவும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் காண்பிக்கிறார்கள். அந்த டூல்கிட்டில் குடியரசு தினத்தன்று எப்படி வன்முறையை நிகழ்த்த வேண்டும், எங்கெல்லாம் போராட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு: சூழலியல் ஆர்வலர் கைது!
கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு: சூழலியல் ஆர்வலர் கைது!

இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அதிலிருந்து தான் டெல்லி போலீஸ் விசாரணையைத் தொடங்கியது. அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் 21 வயதான திஷா ரவி என்பவரை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு இன்று கைதுசெய்திருக்கிறது. 2018ஆம் ஆண்டு “Friday for Future” என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு பருவநிலை மாற்றத்திற்காக கிரேட்டா தன்பெர்க் போராட்டம் நடத்தியபோது இந்தியாவில் இந்த இயக்கம் உருவாகியது.

டூல்கிட் என்பது ஒரு விவகாரம் குறித்த முழு தகவல் தொகுப்பும் அடங்கிய ஆவணமாகும். இது ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு லிங்காக (Link) பகிரப்படும். மைக்ரோசாப்ட் வேர்டு போன்ற படிவங்களில் பிரச்சினையைக் கோப்பாகத் தயாரித்து மக்களின் ஆதரவைக் கோருவதுடன், அதனைத் தீர்ப்பதற்கான வழிகளையும் கூறும். இதற்கான சேவையைப் பல்வேறு இணையதளங்கள் வழங்குகின்றன.