தமிழக எல்லையில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து- பெண்கள் உட்பட 21 பேர் படுகாயம்

தமிழக எல்லையில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து- பெண்கள் உட்பட 21 பேர் படுகாயம்

திருவள்ளூர்

திருத்தணி அருகே தமிழக எல்லையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண்கள் உள்பட 21 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

தமிழக எல்லையில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து- பெண்கள் உட்பட 21 பேர் படுகாயம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு, தமிழகத்தின் பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பெண்கள் உள்பட 38 தொழிலாளர்கள், அந்த நிறுவன பேருந்து மூலம் வந்தனர். பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். ஆந்திரா மாநிலம் நகரி வழியாக தமிழக எல்லையில் உள்ள பொன்பாடி என்ற இடத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, அங்குள்ள தனியார் ஓட்டல் முனபாக வைத்திருந்த தடுப்புகளின் மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

தமிழக எல்லையில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து- பெண்கள் உட்பட 21 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 18 பெண்கள் உள்பட 21 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, விபத்து குறித்து சம்பந்தப்பட்ட ஆடை நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.