“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்?” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

 

“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்?” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகம் உட்பட இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு ஏன் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: தமிழகம் உட்பட இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு ஏன் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதுமான ஊரடங்கை அறிவித்தார். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். அனைத்து விதமான மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் தற்போது அதிகளவில் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் வழக்கம்போல கூட்டம் சேர்ந்தது.

இந்த நிலையில், தமிழகம் உட்பட இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு ஏன் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். வெளிநாடுகளில் எவ்வாறு கொரோனா தொற்று நோய் தனது ஆதிக்கத்தை படர விட்டது என்பதையும், அரசு மக்களிடம் ஏன் இந்த விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்கிறது என்பதையும் விஜயபாஸ்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.