கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?கமல் கேள்வி

 

கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?கமல் கேள்வி

தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில்யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா?

கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?கமல் கேள்வி

கோயில்களில் இருக்கும் யானைகள் பாகனின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. எப்போதும் அவை சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன. சுதந்திரம் இல்லாமல் இருக்கும் அந்த யானைகளுக்கு மன உளைச்சல் ஏற்படும். இதனால் தெம்பு இல்லாமல் போய்விடும். கோவிலில் எப்போதும் இருப்பதால் ஓய்வு என்பதும் இல்லாமல் பொய்விடும். இதற்கெல்லாம் நிவாரணம் தரும் நோக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் நல வாழ்வு முகாம் தொடங்கப்பட்டது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகின்றனர். 48 நாட்கள் இந்த புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில் யானைகளுக்கு மருத்துவ உதவிகளும், போதிய உணவும் வழங்கப்படுகின்றன.

அதேநேரம் காட்டுக்குள் தண்ணீர், உணவு இல்லாமல் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. சமீபத்தில் மசினகுடியில் ஒரு யானையை தீவைத்து கொளுத்தியது ஒரு கும்பல்.

இதற்கு நாடெங்கிலும் கண்டனம் வலுத்து வரும் நிலையில், காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது. என்று டுவிட்டரில் கடந்த 23ம் தேதி அன்று தனது கண்டனத்தினை பதிவு செய்திருந்தார் கமல்.

இந்நிலையில் நேற்று, மீண்டும் தனது கண்டனத்தினை பதிவு செய்து, ‘’தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில்யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா?’’என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.