கார்ட்டூன் சர்சை: பிரதமருக்கு ஆதரவாக களம் இறங்கிய இஸ்லாமியர்கள்!

 

கார்ட்டூன் சர்சை: பிரதமருக்கு ஆதரவாக களம் இறங்கிய இஸ்லாமியர்கள்!

டெல்லியில் போராடும் போராட்டக்காரர்களை விவசாயிகளாக சித்தரித்து அவர்களை பிரதமர் சாப்பிடுவது போல ஒரு கேலிச்சித்திரத்தினை வெளியிட்டது விகடன். பிரதமரை ஒரு ராட்சசன் போல சித்தரித்து பிரதமர் நரேந்திர மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் அந்த கார்ட்டூன் அமைந்ததாக பாஜகவினர் கொந்தளித்தனர்

கார்ட்டூன் சர்சை: பிரதமருக்கு ஆதரவாக களம் இறங்கிய இஸ்லாமியர்கள்!

இந்த அநாகரீக பத்திரிகை விகடனுக்கு ஒவ்வொரு பாஜக தொண்டனும் தக்க பாடம் புகட்ட வேண்டும். விகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம் என்று நேற்று முன் தினம் கொந்தளித்திருந்தார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா.

தமிழக பாஜகவின் துணைத்தலைவர் அண்ணாமலை, நேற்று, பாரம்பரியமான பத்திரிகையில் உள்ளே இருக்கும் சிலரால் இப்படி குருட்டுத்தனமான எண்ணங்கள் வெளிப்படுகின்றன என்று தனது கண்டனத்தினை பதிவு செய்திருந்தார்.

கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக சட்டப்பிரிவின் மாநில செயலாளர் அ.ஸ்வத்தாமன் சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்தள்ள புகாரில்,
’’அரசு பகை மூட்டல் மற்றும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்பி மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல் ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடுங்கள் ஒரு பிரிவினரை தூண்டி,சினம் கூட்டி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சித்தல் தேசத்தின் மாண்பு மற்றும் இறையாண்மையை குறைக்க தூண்டுதல், வலியுறுத்தல், அந்த நோக்கத்தில் அச்சிடுதல், அதை விநியோகித்தல் ஆகிய குற்றங்களுக்காக ஆனந்தவிகடன் பத்திரிகை வெளியீட்டாளர், தலைமை உதவி ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் ஆகியோர் மீது புகார் அளிக்கிறேன்’’என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ‘’ஆனந்தவிகடன் 27. 1 .2021ஆம் தேதி வெளியான பத்திரிக்கையில் உலகத் தலைவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவரை ஒரு ராட்சசன் போல சித்தரித்து டெல்லியில் போராடும் போராட்டக்காரர்களை விவசாயிகளாக சித்தரித்து அவர்களை பிரதமர் சாப்பிடுவது போல ஒரு கேடுகெட்ட சிந்தனையோடு கார்ட்டூனை வரைந்துள்ளனர்.

எதிரி நாடான பாகிஸ்தானின் மனநிலைக்கு சற்றும் குறைவில்லாமல், இன்னும் சொல்லப்போனால் அதைவிட மோசமான மனத்தோடு இந்த கார்டூன்
பிரசுரிக்கப்பட்டுள்ளது . மேற்கண்ட இந்த செயல் அரசுக்கு எதிராக பகை மூட்டும் நோக்கத்தோடு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அன்பையும்மரியாதையையும் குறைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளைப் பரப்பும் வகையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது .

இதன்மூலம் குற்றம் செய்தவர்கள் உடைய நோக்கமும் குற்ற மனமும் தெளிவாக தெரிகிறது. ஆகவே விகடன் பத்திரிகையாளர் விகடன் பத்திரிகை
வெளியீட்டாளர் , தலைமையாசிரியர், கார்டூனிஸ்ட் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124(A) 153, 153(A), 153(B), 499, 504, 505(1), 505(2), 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று, முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்ச் சார்பில், ஆனந்த விகடன் பத்திரிக்கை அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தலைவர் பாத்திமா அலி உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.