கூடவே இருக்கும் பாமகதான் அதைச்செய்தது; இதுகூடவா தெரியாது.. முதல்வருக்கு திமுக கேள்வி

கூடவே இருக்கும் பாமகதான் அதைச்செய்தது; இதுகூடவா தெரியாது.. முதல்வருக்கு திமுக கேள்வி

ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாதுஎன்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்… என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம்சுமத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கூடவே இருக்கும் பாமகதான் அதைச்செய்தது; இதுகூடவா தெரியாது.. முதல்வருக்கு திமுக கேள்வி

ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவின்போது இவ்வாறு பேசிய முதல்வரின் பேச்சுக்கு, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இதற்கு அளித்துள்ள விளக்கத்தில், ’’தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை செய்தபோதும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தபோதும் எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் எந்த வித ஆட்சேபணையும் செய்யவில்லை. இது ஊரறிந்த உண்மை.’’என்று தெரிவித்துள்ளார்.

கூடவே இருக்கும் பாமகதான் அதைச்செய்தது; இதுகூடவா தெரியாது.. முதல்வருக்கு திமுக கேள்வி

மேலும், ’’பழனிச்சாமி கூட்டணியில் இன்று இடம்பெற்றிருக்கும் பாமகவினர்தான் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள். இதுகூடவா தெரியாது. ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசியிருக்கிறார் பழனிச்சாமி. அவரின் இந்த போக்கு ஜெயலலிதாவுக்கு செய்கின்ற பச்சைத்துரோமக் அல்லவா?’’ என்று கேட்கிறார்.

கூடவே இருக்கும் பாமகதான் அதைச்செய்தது; இதுகூடவா தெரியாது.. முதல்வருக்கு திமுக கேள்வி

’’ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்று வழக்கு போட்டது கூட்டணியில் இருக்கும் பாமகவினர்தான் என்று தெரிந்திருந்தும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக ஸ்டாலின் தான் என்று திமுக மீது வீண் பழிபோட்டால் வழக்கு தொடரப்படும்’’ என்று எச்சரித்திருக்கிறார்.