டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்… காங்., கே.எஸ். அழகிரி

 

டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்… காங்., கே.எஸ். அழகிரி

டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்திருக்கிறது. ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி எழுகிறது.

டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்… காங்., கே.எஸ். அழகிரி

அது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்திய வழியில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று

டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிவரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணியை முடக்குவதற்கும் சீர்குலைப்பதற்கும் காவல்துறையினர் சதித்திட்டம் தீட்டி விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி விட்டனர். காவல்துறையினரின் அனுமதியுடன் அமைதியாக சென்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதனால் கடும் வன்முறை வெடித்துள்ளது.

டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்… காங்., கே.எஸ். அழகிரி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய தவ்ஹீத் என்ற விவசாயி உயிரிழக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

டெல்லியில் போராடுகிற விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பாஜக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பாகும். டெல்லியில் போராடுகிற விவசாயிகள் மீது விழுந்த அடி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் மீதும் விழுந்த அடி ஆகும். காவல்துறையினர் நடத்திய தாக்குதல் பாஜக ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினரை ஏவி விட்டு நடத்தப்பட்ட அராஜக தாக்குதல்களை காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். காந்திய வழியில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.