வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல – ராகுல் கண்டனம்

 

வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல – ராகுல் கண்டனம்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கட்ந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் இன்னொரு வடிவமாக இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் பேரணி என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். ஆனால், பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், ஒரு டிராக்டரில் மூன்று முதல் ஐந்து பேர் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர். இதுமாதிரி மொத்தம் 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.தொடங்கிய இடத்தில் பேரணியை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படிதான் டெல்லி போலீசாரும் போராட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.

வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல – ராகுல் கண்டனம்

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டன. தடையை மீறி டிராக்டர்கள் தடுப்புகளை உடைத்ததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். அதையும் மீறி விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்துவிட்டனர். இந்த போராட்டத்தில் ஒரு விவசாயி உயிரிழ்ந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல – ராகுல் கண்டனம்

பதற்றமான சூழ்நிலையில், விவசாயிகள் யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று டெல்லிகாவல்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ’வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. யாராவது காயமடைந்தால், சேதம் நம் நாட்டுக்கு நடக்கும்’’என்று விவசாயிகளை கண்டித்தவர், ’’நாட்டின் நலனுக்காக விவசாய எதிர்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுங்கள்! ’’என்று மத்திய அரசையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்த் ஆதரவு தெரிவித்து வரும் ராகுல்காந்தி, போராட்டம் வன்முறையாக வெடித்ததால் கண்டித்திருக்கிறார்.