தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது.. கவலை தெரிவித்த கமல்!

தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது.. கவலை தெரிவித்த கமல்!

நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அதன் இன்னொரு வடிவமான டிராக்டர் பேரணி சவால்களுக்கு மத்தியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.

தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது.. கவலை தெரிவித்த கமல்!

குதிரைப்படை அணிவகுப்புடன் ராஜபாதைக்கு வந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க தேசீய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் காமராஜர் சாலையில் காந்தி சிலையின் முன்பாக நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செய்தார்.

தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது.. கவலை தெரிவித்த கமல்!

நாடெங்கிலும் இன்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘நாட்டு வளர்ச்சியில் மக்களின் பங்கு என்ன? அது, தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது.’’என்று வருத்தத்தினை தெரிவித்து, ‘’ தங்களுக்கு வேண்டியதைப் பெறவும், வேண்டாததைத் தவிர்க்கவும் மக்களுக்கு இருக்கும் உரிமையைச் செயற்படுத்தும் பாதையில் நகர்வோம். குடியரசு நாள் வாழ்த்துகள்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.