ஜெயலலிதா விழா… உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி

 

ஜெயலலிதா விழா… உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி

கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? என்று கேட்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

ஜெயலலிதா விழா… உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

அவ்வறிக்கையில்,கிராம சபை நடத்த ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை என்று தெரிவித்துள்ளது.

ஆனால், சில அரசியல் கட்சிகள் கிராமசபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்ல அந்த அமைப்பை நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம சபை என்பது அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கிராம நிர்வாக அமைப்பாக மேற்படி ஊராட்சி சட்டத்தின் பிரிவு 32 இன் படி கிராம சபை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது என்றும், அவர் கிராம சபை கூட்டம் நடத்த தவறும் பட்சத்தில் ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும். எனவே மேற்படி சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது, எனவே இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழி வகை உள்ளன என்றும் எச்சரித்திருந்தது.

ஜெயலலிதா விழா… உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி

அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாகும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த படுகிறார் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த தடை குறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.