பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைந்தார்; வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜாக்சன் துரையை மறக்க முடியுமா?

பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைந்தார்; வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜாக்சன் துரையை மறக்க முடியுமா?

பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன்(90) நேற்று உடல்நலக்குறைவினால் காலமானார்.

பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைந்தார்; வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜாக்சன் துரையை மறக்க முடியுமா?

ஆங்கிலேய ஆதிக்கத்தினை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது வாழ்க்கை வரலாற்று படம்தான் 1959ல் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அப்படத்தில் சிவாஜிகணேசனை எப்படி மறக்க முடியாதோ அப்படித்தான் ஜாக்சன் துரையும்.

பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில், ‘சக்தி’டி.கே.கிருஷ்ணசாமியின் வசனம் அப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைந்தார்; வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜாக்சன் துரையை மறக்க முடியுமா?

அதிலும், வரி, வட்டி, கிஸ்தி, யாரை கேட்கிறாய் வரி? எதற்கு கேட்கிறாய் வரி? வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கேன் கட்ட வேண்டும் வரி?
எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே … என்று சிவாஜி அழுத்தம் கொடுத்தும் பேசும் அந்த வசனம் இன்றளவும் பிரபலம்.

இந்த காட்சியில் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக ஜாக்சன் துரையின் நடிப்பும் இருக்கும். ஜாக்சன் துரையாக நடித்தவர் சி.ஆர்.பார்த்திபன்.

பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைந்தார்; வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜாக்சன் துரையை மறக்க முடியுமா?

சி.ஆர். பார்த்திபனின் சொந்த ஊர் வேலூர். சென்னை வந்து லயோலா கல்லூரியில் பி.ஏ. எகனாமிக்ஸ் படித்து தலைமைச்செயலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். சென்னையில் நாடகங்களிலும் நடித்துவந்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திலும் நடித்தார்.

தலைமைச்செயலகத்தில் 82 ரூபாய் சம்பளத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஜெமினி ஸ்டூடியோவில் நடிகராக மாத சம்பளத்திற்கு வேலை சேர்ந்துவிட்டார். மாத சம்பளம் 300 ரூபாய். நடித்த முதல் படம் ஒரு இந்தி சினிமா. இதன்பின்னர் தமிழில் நடித்த படம் புதுமைப்பித்தன். இப்படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின்னர் இரும்புத்திரை, வஞ்சிக்கோட்டை வாலிபன், மோட்டார் சுந்தரம் பிள்ளை என்று ஜெமினி கம்பெனியில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைந்தார்; வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜாக்சன் துரையை மறக்க முடியுமா?

ஜெமினி தவிர வெளிநிறுவன படங்களிலும் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என 120 படங்களில் நடித்திருக்கிறார். இத்தனை படங்களில் நடித்தாலும் அவருக்கு மகுடமாக அமைந்தது என்னவோ வீரபாண்டிய கட்டபொம்மன் படம்தான்.

சென்னையில் மேடவாக்கத்தில் வசித்து வந்தார் சி.ஆர்.பார்த்திபன். 90 வயதில் முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சி.ஆர்.பார்த்திபன் நேற்று காலமானார்.