இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள்.. முன்மொழிந்த மம்தா; வழிமொழிந்த சீமான்

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள்.. முன்மொழிந்த மம்தா; வழிமொழிந்த சீமான்

ஒரே நாடு ஒரே தலைவர் என்கிற அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எல்லாவற்றுக்கும் எதற்காக டெல்லியை சார்ந்திருக்க வேண்டும்? தலைநகரங்களை பரவலாக்க வேண்டும். அதற்கு இந்திய நாட்டிற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்று சகோதரி மம்தா பானர்ஜி கூறியிருப்பது காலத்துக்கு ஏற்ற சாலச்சிறந்த கருத்து. அதனை வரவேற்று முழுமையாக ஏற்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள்.. முன்மொழிந்த மம்தா; வழிமொழிந்த சீமான்

தலைநகரங்களை பரவலாக்குவதன் மூலம்தான் வளர்ச்சியை கடைக்கோடி வரை கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்துதான் தமிழ்நாட்டில் ஐந்து மாநில தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்ற முழக்கத்தையும் முன்வைக்கிறோம். இதைப்போலவே இந்தியாவிற்கும் நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்று சொல்லும் மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமொழிகிறேன் என்கிறார் சீமான்.

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள்.. முன்மொழிந்த மம்தா; வழிமொழிந்த சீமான்

மேலும், நான்கு தலைநகரங்களில் ஒரு தலைநகரம் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்கிற எமது கோரிக்கையினையும் இணைத்து அதைனையும் முன்வைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு வலு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனங்களின் தலையாய கடமை என்று சொல்கிறார் சீமான்.