அதிமுகதான் வேணும்… ராமதாஸ்: திமுகதான் வேணும்…அன்புமணி!

 

அதிமுகதான் வேணும்… ராமதாஸ்: திமுகதான்  வேணும்…அன்புமணி!

அதிமுக கூட்டணியில் தொடர்வதைத்தான் விரும்புகிறார் ராமதாஸ். அதே நேரம் சீட் விவகாரத்தில்தான் இடஒதுக்கீட்டு பிரச்சனையை வைத்து அழுத்திக் கொண்டிருகிறார் என்கிறது அன்புமணி வட்டாரம். ராமதாசின் எண்ணம் இப்படி இருக்க, அன்புமணியின் கணக்கோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதிமுகதான் வேணும்… ராமதாஸ்: திமுகதான்  வேணும்…அன்புமணி!

திமுகதான் வர்ற எலெக்சன்ல ஜெயிக்கும். அதனால அந்த கட்சியோட சேர்ந்து போட்டியிட்டாதான் ஜெயிக்க முடியும். நம்ம தரப்பிலும் நாலு எம்.எல்.ஏ. இருந்தாதான் அடுத்த ஐந்து ஆண்டுக்கு கட்சியை நடத்தலாம் என்று நினைக்கும் அன்புமணி, இதை நேரடியாக தந்தையிடம் சொல்லாமல், கட்சி சீனியர்களை விட்டு பேச வைத்திருக்கிறார்.

அதிமுகதான் வேணும்… ராமதாஸ்: திமுகதான்  வேணும்…அன்புமணி!

பாமக தலைவர் ஜி.கே.மணியும் இதை நேரடியாக ராமதாசிடம் சொல்லாமல், தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழுவில் பங்கேற்றவரிடம் திமுகவுடன் கூட்டணியா? என்று கேட்டபோது, வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கீடுக்கு ஓக்கே சொன்னா ராமதாஸ் கூட்டணி பற்றி முடிவு செய்வார் என்று சொன்னார்.

ஜி.கே.மணி பேச்சு மூலமாக அன்புமணியின் எண்ணத்தை அறிந்துகொண்ட ராமதாஸ், அதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லையாம்.

மேலும், திமுக கூட்டணி சம்பந்தமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பேசி வருகிறார் என்று தகவல் கசிந்துகொண்டே இருக்கிறது.

அதிமுகதான் வேணும்… ராமதாஸ்: திமுகதான்  வேணும்…அன்புமணி!

இருவரும் ஓட்டலில் சந்தித்து பேசியது குறித்தும் தர்மபுரியில் ஜி.கே.மணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுந்தபோது, அதற்கு மலுப்பலான பதிலை சொல்லிவிட்டார் மணி. ஆனாலும், துரைமுருகனுடன் அன்புமணி அடிக்கடி பேசிவருவதாகவும், இடஒதுக்கீடுக்கு சரி என்று சொல்லிவிட்டால் கூட்டணியை முடிவு செய்துவிடலாமே என்று துரைமுருகன் மூலமாக ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்து வருவதாக சொல்கிறது அன்புமணியின் இளைஞர் அணி வட்டாரம்.