ஆடையை அகற்றாமல் தொட்டது பாலியல் வன்கொடுமை கிடையாது – சிறுமி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

 

ஆடையை அகற்றாமல் தொட்டது பாலியல் வன்கொடுமை கிடையாது – சிறுமி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

ஆடையை கழற்றி தோலுடன் தோல் டச் ஆனால்தான், அதன் பின்னர் மார்பை பிடித்து தொட்டிருந்தால்தான் அது பாலியல் நோக்கத்துடன் நடந்த செயல். ஆடையை அகற்றாமல், தோலுடன் தோல் படாமல் (Without Skin-To-Skin Contact)வெறுமனே மார்பை பிடிப்பது என்பது பாலியல் வன்கொடுமைக்குள் வராது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

12 வயது சிறுமி வழக்கில் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.

ஆடையை அகற்றாமல் தொட்டது பாலியல் வன்கொடுமை கிடையாது – சிறுமி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.

என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார்.

ஆடையை அகற்றாமல் தொட்டது பாலியல் வன்கொடுமை கிடையாது – சிறுமி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.

ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும்.

இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி

மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.