நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS.என்று தெரிவித்திருக்கிறார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர்.

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள சிகரம் டவரில் நேற்று இரவு மறைந்த பத்திரிகையாளர்கள் ஆர்.சி.சம்பத், நெல்லை பாரதி, இலட்டு இக்பால், இளவேனில் ஆகியோரின் படத்திறப்பு விழா நடைபெற்றது.

நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், எல்.வி.ஆதவன், மூத்த பத்திரிகையாளர்கள் துரைபாரதி, டி.எஸ்.மணி, துரை ராமச்சந்திரன், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வுக்கு வருகை தந்தனர்.

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர்களின் நலச்சங்கத்தின் 12ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பத்திரிகையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆர்.சி.சம்பத், நெல்லை பாரதி, இலட்டு இக்பால், இளவேனில் ஆகியோரைப்பற்றின கட்டுரைகள் அடங்கிய ‘திரைக்கதம்பம்’ நூல் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்வுக்கு எந்தவித பந்தாவும் இல்லாமல் வெகு இயல்பாக வந்து மறைந்த பத்திரிகையாளர்களின் படங்களை திறந்துவைத்துவிட்டு சென்றார்.

அப்போது மேடையில் எஸ்.வி.சேகருடன் பேசிக்கொண்டிருந்தார் விஜய்சேதுபதி. அதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS.என்று தெரிவித்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.