சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற முடியாத சட்ட சிக்கல்!

 

சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற முடியாத  சட்ட சிக்கல்!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா வந்தபோது அவர் அம்மாநிலத்தில் உள்ள மணிப்பால் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட போதும் அதே மணிப்பால் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.

சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற முடியாத  சட்ட சிக்கல்!

சசிகலாவையும் அந்த மணிப்பால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையைளிக்க முயற்சித்தி வருகிறார் அக்காள் மகன் டிடிவி தினகரன். ஆனால், சட்ட சிக்கலை காரணம் காட்டி சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்.

சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற முடியாத  சட்ட சிக்கல்!

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் வசதிகள் குறைவாக இருந்ததால், விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, “சசிகலா நலமாக இருக்கிறார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கான கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. சசிகலாவின் உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக் கப்படுகிறது. 7அல்லது 10 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற முடியாத  சட்ட சிக்கல்!

ஆனால், சசிகலாவுக்கு உயர் சிகிச்சை அளிக்க நினைக்கும் டிடிவி தினகரன், மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்க, இன்னும் மூன்று நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுகிறார். அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அவரை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளதாம் சிறை நிர்வாகம்.

இன்னும் 7 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் , அதுவும் கொரோனா சிகிச்சையில் உள்ள ஒருவரை மாற்ற நினைப்பது சரியல்ல என்று விக்டோரியா மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனராம்.

27ம் தேதி விடுதலை நாள் என்பதால் அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மணிப்பால் மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்படலாம் என்று தெரிகிறது.