ராமர் கோயில் கட்ட நாம் நிதியுதவி செய்யணும்; ஏன் தெரியுமா? இஸ்லாமிய பெண் விளக்கம்

ராமர் கோயில் கட்ட நாம் நிதியுதவி செய்யணும்; ஏன் தெரியுமா?  இஸ்லாமிய பெண் விளக்கம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் நாம் நிதியுதவி செய்யவேண்டும். அதை ஏன் செய்ய வேண்டும் என்று ராமர் கோயில் கட்ட நிதி திரட்டும் இஸ்லாமிய பெண் தெரிவித்துள்ளார்.

மசூதிக்கள், தர்காக்கள் கட்ட இந்துக்கள் நிதியுதவி செய்தது போல ராமர்கோவில் கட்ட முழு மனதுடன் இஸ்லாமிய சமுதாய மக்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய பெண் ஜஹாரா பேகம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ராமர் கோயில் கட்ட நாம் நிதியுதவி செய்யணும்; ஏன் தெரியுமா?  இஸ்லாமிய பெண் விளக்கம்

தஹிரா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார் ஜஹாரா பேகம்.

நிதி சேகர்னா திட்டத்தின் கீழும், நிதி சம்பர்னா பிரிவின் கீழும் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதியுதவியினை இஸ்லாமிய மக்களும் வழங்க வேண்டும். தங்களால் முடிந்த 10 ரூபாய்தான் என்றாலும் அதை தாராளமாக வழங்கலாம் என்று வசூலித்து வருகிறார் ஜஹாரா பேகம்.

ராமர் கோயில் கட்ட நாம் நிதியுதவி செய்யணும்; ஏன் தெரியுமா?  இஸ்லாமிய பெண் விளக்கம்

தர்ம நெறியினை தனது வாழ்க்கை முறையாக கொண்டு வாழ்ந்தவர் ராமர். உலகம் முழுவதற்கு அவர் முன்மாதிரியாக விளங்குகிறார். ராமர் பிறந்த நாட்டில் நாமும் பிறந்ததற்கு பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நாம் வாழும் காலத்தில் ராமருக்கு கோயில் கட்டப்படுவது அதைவிட பெரும் பாக்கியம். இதில் இஸ்லாமிய மக்களும் முழுமனதுடன் பங்கேற்க வேண்டும் என்று சொல்லி நிதி திரட்டி வருகிறார்.

அயோத்தி மசூதி பிரச்சனைக்கு பின்னர் அங்கே ராமர் கோவில் கட்டப்படும் பரபரப்பான சூழலில் இந்த இஸ்லாமிய பெண்ணின் செயலும் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.