சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்; போலீஸ் அறிக்கை சொல்வதென்ன?

 

சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்; போலீஸ் அறிக்கை சொல்வதென்ன?

நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் அடைந்ததால்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்; போலீஸ் அறிக்கை சொல்வதென்ன?

சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயங்கள் ஏதும் கழுத்தில் இல்லை என்று பெற்றோர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் தனக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த அறிக்கையை போலீஸ் தாக்கல் செய்திருக்கிறது.

இந்த வழக்கில் பிப்ரவரி 2ம் தேதிக்குள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்; போலீஸ் அறிக்கை சொல்வதென்ன?

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிச.9ம் தேதி சென்னை நசரத் பேட்டையில் இருக்கும் சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக தெரிய வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை, இது திட்டமிட்ட கொலை தான் என்று சித்ராவின் தாயார் உட்பட பலர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


இதனால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது. விசாரணையை முடித்த ஆர்.டி.ஓ திவ்யா, அறிக்கையை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார். அதன் முடிவிலும், சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் சரிவர தெரிய வரவில்லை. இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்; போலீஸ் அறிக்கை சொல்வதென்ன?

இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், சித்ராவுக்கும் தனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் அடைந்ததால்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.