வங்காளத்தின் மகனை வைத்து மோடியும் மம்தாவும் செய்யும் அரசியல்

வங்காளத்தின் மகனை வைத்து  மோடியும் மம்தாவும் செய்யும் அரசியல்

நேதாஜியின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 23ம் தேதியை துணிச்சல் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ஒரு நாளோடு நின்றுவிடாமல் ஓராண்டுக்கு நேதாஜியின் 125 பிறந்தநாளை கொண்டாடவும் மோடி தலைமையிலான குழு திட்டமிட்டு வருகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் துணிச்சல் தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

வங்காளத்தின் மகனை வைத்து  மோடியும் மம்தாவும் செய்யும் அரசியல்

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜியின் பிறந்த நாளை தேஷ் நாயக் திவாஸ் ( தேச நாயகன் ஜெயந்தி) என்று கொண்டாட உத்தரவிட்டிருக்கிறார்.

வங்காளத்தின் மகனை வைத்து  மோடியும் மம்தாவும் செய்யும் அரசியல்

நேதாஜி வங்காளத்தின் மாபெரும் மகன்களில் ஒருவர் என்றும், அவர் ஒரு தேசிய ஹீரோ என்றும், இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னம் என்றும் நாட்டுக்கான உன்னதமான தியாகங்களை செய்தவர் என்றும் தெரிவித்திருந்த மம்தா, நேதாஜியின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதால் நேதாஜி பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு மம்தா கோரிக்கை விடுத்து வந்தார்.

வங்காளத்தின் மகனை வைத்து  மோடியும் மம்தாவும் செய்யும் அரசியல்

ஒரு மாநிலத்தில் மத்திய அரசு சார்பாகவும், மாநில அரசு சார்பாகவும் நேதாஜிக்கு விழா கொண்டாடப்பட இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேற்கு வங்காள தேர்தலை கணக்கில் கொண்டுதான் மோடி கொல்கத்தாவில் துணிச்சல் தினம் கொண்டாடுவதாக மம்தா தெரிவித்திருக்கிறார். ஆனால், வங்காளத்தின் மகன் நேதாஜியை வைத்து மோடியும் மம்தாவும் அரசியல் செய்வதாக அம்மாநில மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.