திமுக ஆட்சிக்கு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்… ஜெகத்ரட்சகன்

 

திமுக ஆட்சிக்கு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்… ஜெகத்ரட்சகன்

திமுகவின் மூத்த நிர்வாகி ஜெகத்ரட்சகன் எம்.பி., பாஜகவில் இணையவிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், இதை மறுத்த ஜெகத்ரட்சகன், சாகும் வரையிலும் திமுகவில்தான் இருப்பேன் என்று உறுதி கூறிவந்தார். அதற்கு பலனாக அவரை புதுச்சேரி மாநில முதல்வர் வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறார் ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்… ஜெகத்ரட்சகன்

புதுச்சேரியில் தற்போது திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், அடுத்து வரும் தேர்தலில் திமுக ஆட்சியில் அமர முடிவெடுத்திருக்கிறது. ஆகவே, புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

மேலும், ’’புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’’ என்று கூறியிருக்கிறார் அழுத்தமாக.

திமுக ஆட்சிக்கு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்… ஜெகத்ரட்சகன்

புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றம் நிகழும் என்றும், புதுச்சேரியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் பேசி வருவதால் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியையும் அவர் குறைசொல்வதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜெகத்ரட்சகனின் பேச்சால் புதுச்சேரி திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதலா? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது குறித்து பேச அவர் மறுத்து வருகிறார்.