தனித்து போட்டி மாயாவதி.. சிறு கட்சிகளுடன் கூட்டணி அகிலேஷ் யாதவ்.. பா.ஜ.க.வின் வெற்றியை எளிதாக்கும் கட்சிகள்

 

தனித்து போட்டி மாயாவதி.. சிறு கட்சிகளுடன் கூட்டணி அகிலேஷ் யாதவ்.. பா.ஜ.க.வின் வெற்றியை எளிதாக்கும் கட்சிகள்

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்து இருப்பது அந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பா.ஜ.க. அரசின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மத்தியில் முடிவுக்கு வரும். ஆகையால் 2022 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளன.

தனித்து போட்டி மாயாவதி.. சிறு கட்சிகளுடன் கூட்டணி அகிலேஷ் யாதவ்.. பா.ஜ.க.வின் வெற்றியை எளிதாக்கும் கட்சிகள்
பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் வலுவான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக தெரிவித்து விட்டது. அதேசமயம் மாநிலத்தில் உள்ள சிறு கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவா அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். அந்த மாநிலத்தில் மற்றொரு கணிசமான வாக்கு வங்கியை கொண்ட கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயாராக இல்லை. அந்த கட்சியின் தலைவி மாயாவதி கடந்த சில தினங்களுக்கு முன், உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார்.

தனித்து போட்டி மாயாவதி.. சிறு கட்சிகளுடன் கூட்டணி அகிலேஷ் யாதவ்.. பா.ஜ.க.வின் வெற்றியை எளிதாக்கும் கட்சிகள்
காங்கிரஸ்

அகிலேசும், மாயாவதியும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து விட்டதால் தேசிய மற்றும் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் அநேகமாக தனித்து போட்டியிட வேண்டியது இருக்கும் அல்லது சிறு கட்சிகளுடன் ஜோடி சேர வேண்டியது இருக்கும். இதற்கிடையே அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் எந்த கட்சிக்கும் முழுமையாக கிடைக்காமல் சிதற வாய்ப்புள்ளது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அப்படி நடந்தால் பா.ஜ.க. எளிதாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.