Home வணிகம் பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.... பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிதி நிலை முடிவுகள், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை இந்த வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

மாருதி சுசுகி, சிப்லா, கோடக் மகிந்திரா வங்கி, லார்சன் அண்டு டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட சுமார் 375 நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை அறிவிக்க உள்ளன. அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் இந்த வாரம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதி கொள்கையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்பில்லை. அதேசமயம், கொரோனா வைரஸ், தடுப்பூசி மற்றும் பலவீனமா வேலைவாய்ப்பு டேட்டாவுக்கு மத்தியில் அந்நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து அமெரிக்க பெடரல் வங்கி கருத்து தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி இந்தியா

2021 பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக வரும் நாட்களில் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரமும் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கடந்த சனிக்கிழமை வரை 15 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போது நம் நாட்டில் மொத்தமே சுமார் 1.85 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய பங்கு வெளியீடு

ஸ்டவ் கிராப்ட் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் இந்த வாரம் களமிறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கி வரும் 28ம் தேதி முடிவடைய உள்ளது. அமெரிக்கா, ஐப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் இந்த வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேர்தலுக்காக சிறுபான்மையினரின் நண்பர்களைப் போல நடிப்பவர்கள் நாங்கள் அல்ல- ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – திமுக உறவு என்பது தேர்தல்கால உறவல்ல, நீண்டகாலமாக இருந்து வரும் கொள்கை உறவு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்… விரக்தியில் ராணுவ வீரர் தற்கொலை…

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் அருகே காதல் தோல்வியால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை மாதவரத்தில் நடைபெற்ற உங்கள்...

சினிமாவில் ஹீரோவான ஹரிநாடார்

நெல்லை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹரிநாடாரின் சின்ன வயசு ஆசை ரொம்ப வித்தியாசமானது. வறுமையின் காரணமாக, நிறைய சம்பாதிச்சு உடம்பு முழுவதும் நகைகளை போட்டுக்கொள்ளணும் என்கிற...
TopTamilNews