இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. நிபுணர்கள் முன்னறிவிப்பு

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. நிபுணர்கள் முன்னறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது மேலும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது இது பங்கு சந்தைக்கு சாதகமானது. அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான சான்செரா என்ஜினீயரிங் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நாளை (14ம் தேதி) தொடங்கி வரும் வியாழக்கிழமையன்று (16ம் தேதி) முடிவடைகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. நிபுணர்கள் முன்னறிவிப்பு
கொரோனா வைரஸ்

அண்மையில் புதிய பங்கு வெளியீட்டில் ஈடுபட்ட விஜயா டயக்னாஸ்டிக் சென்டர் மற்றும் அமி ஆர்கானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது. கடந்த ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் நாளை வெளியாகிறது. ஆகஸ்ட் மாத வர்த்தக பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரம் புதன்கிழமையன்று வெளியாக உள்ளது. செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி கைவசம் உள்ள அன்னிய செலாவணி குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. நிபுணர்கள் முன்னறிவிப்பு
பணவீக்கம்

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.