சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது..

சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. செனசெக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்தது.

கோவிட்-19 தொடர்பான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி பணப் புழக்கத்துக்கு ஒப்புதல், கூடுதல் கடன்மறுசீரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸின் அறிவிப்புகள் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய 3 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது..
சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,836 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,106 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.208.69 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 424.04 புள்ளிகள் உயர்ந்து 48,677.55 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 121.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,617.85 புள்ளிகளில் முடிவுற்றது.