முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்திய பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் ரூ.2.15 லட்சம் கோடி நஷ்டம்

முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்திய பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் ரூ.2.15 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 850 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் மீண்டும் எழ தொடங்கியது, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்திய பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் ரூ.2.15 லட்சம் கோடி நஷ்டம்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.201.29 லட்சம் கோடியாக குறைந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 19) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.44 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.15 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்திய பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் ரூ.2.15 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 849.74 புள்ளிகள் சரிந்து 49,008.50 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 236.70 புள்ளிகள் இறக்கம் கண்டு 14,507.30 புள்ளிகளில் முடிவுற்றது.