இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள், கடந்த ஜூன் மாத சில்லரை, மொத்த விலை பணவீக்கங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்போசிஸ், விப்ரோ, எல் அண்ட் டி, எல் அண்ட் டி டெக்னாலஜிஸ் சர்வீசஸ், எச்.எம்.டி., எச்.எப்.சி.எல். மற்றும் ஆதித்யா பிர்லா மணி உள்பட சுமார் 75 நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் வெளியிட உள்ளன. கடந்த மே தொழில்துறை உற்பத்தி, கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
இன்போசிஸ்

கடந்த ஜூன் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வரும் புதன்கிழமை வெளியாகிறது. நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக நடைபெறுகிறது. அதேசமயம் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் சில பாதிக்கப்பட்டு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சோமேடோ புதிய பங்கு வெளியீடு வரும் 14ம் தொடங்குகிறது.அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிடுகின்றன. இதுதவிர, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.