அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்… 4 நாளில் ரூ.8.31 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 2,593 புள்ளிகள் வீழ்ச்சி

அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்… 4 நாளில் ரூ.8.31 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 2,593 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வார பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 2,593 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. ஆகையால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள், அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு தொடர்பான நிச்சயமின்மை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்… 4 நாளில் ரூ.8.31 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 2,593 புள்ளிகள் வீழ்ச்சி
மத்திய பட்ஜெட்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.186.12 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 22) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.194.43 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.8.31 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்… 4 நாளில் ரூ.8.31 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 2,593 புள்ளிகள் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தை

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,592.77 புள்ளிகள் குறைந்து 46,285.77 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 737.30 புள்ளிகள் சரிவு கண்டு 13,634.60 புள்ளிகளில் முடிவுற்றது.