தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்… சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்… சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.4.18 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் இருந்தது, அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியது, கடந்த ஜனவரி மாதத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது, ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது, பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்… சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது..
மத்திய பட்ஜெட்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பேங்க், எச்.டி.எப்.சி. வங்கி, எல் அண்டு டி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன் மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்… சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,761 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,179 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.196.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.18 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்… சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,197.11 புள்ளிகள் உயர்ந்து 49,797.72 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 366.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,647.85 புள்ளிகளில் முடிவுற்றது.