பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் மத்திய பட்ஜெட்… சென்செக்ஸ் 2,315 புள்ளிகள் அதிகரிப்பு

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் மத்திய பட்ஜெட்… சென்செக்ஸ் 2,315 புள்ளிகள் அதிகரிப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.6.41 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 6 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் இன்று பங்கு வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற குழப்பத்தில் முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால் மத்திய நிதியமைச்சா நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பங்கு வர்த்தகத்துக்கு பெரிய ஊக்கத்தை கொடுத்தது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் மத்திய பட்ஜெட்… சென்செக்ஸ் 2,315 புள்ளிகள் அதிகரிப்பு
மத்திய பட்ஜெட்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் பின்சர்வ், எஸ்.பி.ஐ. மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர்ரெட்டீஸ், டெக் மகிந்திரா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் மத்திய பட்ஜெட்… சென்செக்ஸ் 2,315 புள்ளிகள் அதிகரிப்பு
எல் அண்டு டி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,945 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 987 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 197 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.192.53 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.41 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் மத்திய பட்ஜெட்… சென்செக்ஸ் 2,315 புள்ளிகள் அதிகரிப்பு
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,314.84 புள்ளிகள் உயர்ந்து 48,600.61 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 646.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,281.20 புள்ளிகளில் முடிவுற்றது.