Home வணிகம் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்

சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது.

சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகத்த்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டி.சி.எஸ். மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட 17 மொத்தம் நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்
டி.சி.எஸ்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,251 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,646 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.91 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.77 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.62 புள்ளிகள் உயர்ந்து 48,803.68 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 76.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,581.45 புள்ளிகளில் முடிவுற்றது.

சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

ஆதாரங்கள் இருந்தால் யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில்...

மக்களே உஷார்…! கொரோனா இரண்டாம் அலை “மிகவும் ஆபத்தானது” – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது....

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....
- Advertisment -
TopTamilNews