2021ல் ரஜினி சொன்னது போல பா.ஜ.க ஆட்சி! – எஸ்.வி.சேகர் ஆரூடம்

 

2021ல் ரஜினி சொன்னது போல பா.ஜ.க ஆட்சி! – எஸ்.வி.சேகர் ஆரூடம்

ரஜினி கூறியது போல 2021 சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நிகழும், பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமையும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் தன்னை எந்த கட்சியையும் சாராதவர் என்று கூறிக்கொண்டாலும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி நடக்கிறார் என்று ஊரே கூறி வருகிறது.

ரஜினி கூறியது போல 2021 சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நிகழும், பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமையும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

sv

ரஜினிகாந்த் தன்னை எந்த கட்சியையும் சாராதவர் என்று கூறிக்கொண்டாலும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி நடக்கிறார் என்று ஊரே கூறி வருகிறது. இந்த நிலையில், ரஜினி கூறியது போல பா.ஜ.க ஆட்சி அமையும் என்று எஸ்.வி.சேகர் கூறிய காட்சிகள் எடிட் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

sekar

எடிட் செய்து சுருக்கப்பட்ட அந்த வீடியோவில் “2021ல் பாரதிய ஜனதாவின் தலைமையில் அமையும் ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். இந்த வரக்கூடிய தேர்தலில் அதிசயம் நிகழும் என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார். எந்த நேரத்தில் சொன்னாரோ, இறைவன் அருளால்தான் சொல்லியிருப்பார். அந்த அதிசயத்தை நாம் நிகழவைக்க வேண்டும்” என்கிறார்.