தமிழ்நாடு அரசுக்கு டிஜிட்டல் இந்தியா -2020 விருது : குடியரசுத்தலைவர் வழங்கினார்

 

தமிழ்நாடு அரசுக்கு டிஜிட்டல் இந்தியா -2020 விருது :  குடியரசுத்தலைவர் வழங்கினார்

மத்திய அரசின் ஆய்வின்படி நல் ஆளுமையில் முதல் மாநிலம், இந்தியா டுடேநடத்திய ஆய்வில் தொடர்ந்து 3ஆண்டுகளாக முதலிடம், மத்திய அரசின்நீர் மேலாண்மை பட்டியலில் முதலிடம், கொரோனா காலகட்டத்திலும் இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம், சிறந்த நீர் மேலாண்மையால் 30 ஆண்டுகளில் இல்லாத மகசூழ், இந்தியாவிலேயே மிகக்குறைந்த வேலையின்மை விகிதம் உள்ள மாநிலம், தமிழக மக்களை காக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல் மாநிலம்,

தமிழ்நாடு அரசுக்கு டிஜிட்டல் இந்தியா -2020 விருது :  குடியரசுத்தலைவர் வழங்கினார்

உணவு தானிய உற்பத்தியில் 5 முறை மத்திய அரசின் கிருஷி கர்மான் விருது, வேலூர், கரூர் மாவட்டங்களுக்கு நதிகள் மீட்பிற்கான தேசிய நீர் விருதுகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும்கல்வியில் மத்திய அரசின் சிறந்த மாநிலத்திற்கான விருது, ஒரு கோடிக்கும் மேல் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்த ஒரே மாநிலம், மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் முதல் மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது, டாடா டிரஸ் ஆய்வின் படி இந்தியாவில் சிறந்த காவல்துறை , பாலூட்டும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைத்தமைக்காக மத்திய அரசின் விருது, அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி அளித்தமைக்கான தேசிய விருது,

தொடர்ந்துமூன்று ஆண்டுகளாக பொருளாதார மேம்பாட்டில்(வளர்ச்சி, புதுமை, தலைமைத்துவம்), இரண்டாமிடம், பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்கள் மையத்தின் குறியீட்டின்படி தொடர்ந்து 4ஆண்டுகளாக2மிடம், உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடம், மத்திய அரசின் ஆய்வின்படி கிராமப்புற சுகாதாரத்தில் முதலிடம், சாலை பாதுகாப்பில் சிறந்த மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது என்று பட்டியலிட்டு சொல்லும் அளவுக்கு தமிழகம் சாதனைகளில் வெற்றிநடை போடுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு டிஜிட்டல் இந்தியா -2020 விருது :  குடியரசுத்தலைவர் வழங்கினார்

இந்நிலையில், டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழ்நாடு அரசுக்கு ‘டிஜிட்டல் இந்தியா -2020’ என்ற தங்க விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி இருக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன் மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தமிழ்நாடு தேர்வாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு டிஜிட்டல் இந்தியா -2020 வெள்ளி விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.