விஜய்சேதுபதி பிறந்தநாள்… நடிகைகளின் வாழ்த்துமழை

 

விஜய்சேதுபதி பிறந்தநாள்… நடிகைகளின் வாழ்த்துமழை

ராஜபாளையத்தில் பிறந்த விஜய்சேதுபதி, ஏராளமான திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோ ஆனார். பீட்சாபடத்தின் மூலம் இவர் மீது புகார் வெளிச்சம் பாய்ந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலமாக எல்லோருக்கும் நெருக்கமான நடிகரானார். ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கும் விதமாக உயர்ந்தார்.

விஜய்சேதுபதி பிறந்தநாள்… நடிகைகளின் வாழ்த்துமழை

ஈகோ இல்லாமல் பிற ஹிரோக்களுன் இணைந்து படங்களில் நடிப்பவர் விஜய்சேதுபதி. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த விஜய்சேதுபதி தமிழில் ரஜினியுடன், விஜய்யுடன் நடித்திருக்கிறார். ஹிந்தியிலும் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழில் விஜய்யுடன் நடித்த மாஸ்டர்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. மாஸ்டர் கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு இன்று 16.1.2021ல் பிறந்த நாள். இதைமுன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.

மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் உயர்ந்த உயரத்திற்கு உயரட்டும் என்று நடிகை குஷ்பு வாழ்த்தி இருக்கிறார் நடிகை குஷ்பு.

மேலும், நடிகைகள் ராதிகா, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டோரும், நடிகர் சாந்தனு உள்ளிட்ட நடிகர்களும்க் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.