பங்குச் சந்தை முதலீட்டாளர்களை வாழ வைத்த 2020ம் ஆண்டு…. முதலீட்டாளர்களுக்கு ரூ.32.67 லட்சம் கோடி லாபம்

பங்குச் சந்தை முதலீட்டாளர்களை வாழ வைத்த 2020ம் ஆண்டு…. முதலீட்டாளர்களுக்கு ரூ.32.67 லட்சம் கோடி லாபம்

2020ம் ஆண்டு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்து விட்டது. இந்த ஆண்டில் சென்செக்ஸ் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஏற்றம் கண்டு வந்த போதிலும், உலகத்தை புரட்டி போட்ட கொரோனா வைரஸ், லாக்டவுன் மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் இடையில் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை குவித்தது, லாக்டவுன் தளர்வு, எதிர்பார்த்ததை காட்டிலும் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் விறுவிறுவென ஏற்றம் கண்டது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டில் மட்டும் ரூ.1.70 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.36 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களை வாழ வைத்த 2020ம் ஆண்டு…. முதலீட்டாளர்களுக்கு ரூ.32.67 லட்சம் கோடி லாபம்
அன்னிய முதலீட்டாளர்

தொடர்ந்து 5வது ஆண்டாக இந்த ஆண்டிலும் பங்குச் சந்தைகள் உயர்வு கண்டது. 2020ம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 6,497.59 புள்ளிகள் உயர்ந்து 47,751.33 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1,813.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,981.75 புள்ளிகளில் முடிவுற்றது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களை வாழ வைத்த 2020ம் ஆண்டு…. முதலீட்டாளர்களுக்கு ரூ.32.67 லட்சம் கோடி லாபம்
சென்செக்ஸ்

2020ம் ஆண்டில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.188 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.155.33 லட்சம் கோடியாக இருந்தது. 2020ம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.32.67 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களை வாழ வைத்த 2020ம் ஆண்டு…. முதலீட்டாளர்களுக்கு ரூ.32.67 லட்சம் கோடி லாபம்
சிப்லா

இந்த ஆண்டில் டிவிஸ் லேப்ஸ் நிறுவன பங்கு விலை அதிகபட்சமாக 108.14 சதவீதம் உயர்ந்தது. அடுத்து டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (81 சதவீதம்) மற்றும் சிப்லா (71.47 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம் இண்டஸ்இந்த் வங்கி பங்கு விலை அதிகபட்சமாக 46 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அடுத்து கோல் இந்தியா (36 சதவீதம்) மற்றும் இந்தியன் ஆயில் (28 சதவீதம்) ஆகிய நிறுவன பங்குகளின் விலை சரிவு கண்டது.