தங்கத்தையும் விட்டுவைக்காத நம்ம தங்கம் ‘2020’

 

தங்கத்தையும் விட்டுவைக்காத நம்ம தங்கம் ‘2020’

இந்தியாவில் தங்கத்தை விரும்பாத பெண்களைக் காண்பது மிக மிக அரிது. ஆடம்பரத்திற்கும் அழகிற்கும் தங்கத்தை ஒரு தரப்பினர் வாங்கினாலும், இன்னொரு தரப்பினர், நெருக்கடி நேரத்தில் கைகொடுக்கும் முதலீடாகக் கருதியே தங்கம் வாங்குகின்றனர். சர்வதேச அளவிலும் கூட பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுவதால், பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்ட போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவித்தனர். அதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது.

தங்கத்தையும் விட்டுவைக்காத நம்ம தங்கம் ‘2020’

ஜனவரி 2ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையாகும். இதன் பின் விறுவிறுவென உயர்ந்த தங்கம் விலை ஜூன் 20ஆம் தேதி சவரன் 36 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து ஜூலை 27ஆம் தேதி 40 ஆயிரம் என்ற மைல் கல் அளவை தாண்டி 40 ஆயிரத்து 104 ரூபாய்க்கு ஒரு சவரன் தங்கம் விற்கப்பட்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் 43 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. இந்தச் சூழலில் பொதுமுடக்க தளர்வுகள் மற்றும் கொரோனா தடுப்பூசிக்கான சாதகமான அறிவிப்புகளாலும் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், சென்ற நவம்பரில் சவரன் 36 ஆயிரத்து 152 ரூபாய் என விலை குறைந்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் தங்கத்தின் விலை தற்போது 37 ஆயிரத்து 792 ரூபாயாக விற்கப்படுகிறது.